வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் தர்ஷன். பலமுறை ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்ததின் பேரில் ஆறு வாரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் மூன்று வாரம் தற்போது கடந்து விட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விசாரணையின் போது தர்ஷன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தர்ஷனின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அதன்படி வெளியான தகவலில், “என் மீது போலீசார் தவறாக வழக்கு பதிந்து உள்ளனர். பொய்யான பல ஆதாரங்களை உருவாக்கியுள்ளனர். கொல்லப்பட்ட ரேணுகா சுவாமி ஒன்றும் உத்தமர் அல்ல. பல பெண்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்த சமூகத்திற்கு தீங்கான ஒரு ஆசாமி தான். அவர் ஆனால் அவரை ஏதோ ஹீரோ போலவும் என்னை (தர்ஷனை) ஒரு வில்லன் போலவும் சித்தரிக்க முயற்சி நடக்கிறது. நான் நிஜத்திலும் கூட எப்போதும் ஹீரோ தான்” என்று கூறியுள்ளார் தர்ஷன்.
இந்த வாக்குமூலத்தை பதிவு செய்த தர்ஷினின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடும்போது, “ரேணுகா சுவாமி ஒரு சமூக கேடான, நீதிக்கு புறம்பாக செயல்படுகின்ற ஒரு மனிதன் தான் என்றாலும் அதற்காக அவர் கொல்லப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் தர்ஷன் மீது இந்த வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று (நவ-28) மீண்டும் தொடர்கிறது. இடைக்கால ஜாமீன் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே அவகாசம் இருப்பதால் அதற்குள் இந்த வாதங்கள் மூலமாக முழுமையான ஜாமீன் பெற்று விட அவரது வழக்கறிஞர் தரப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.