அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரியதர்ஷன். 99 படங்களை இயக்கிவிட்ட அவர் தற்போது தனது நூறாவது படத்தை நடிகர் மோகன்லாலை வைத்து இயக்க இருக்கிறார். ஏற்கனவே மோகன்லாலை வைத்து கிட்டத்தட்ட 40 படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழிலும் சில படங்களை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷன் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான இளம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதேசமயம் கல்யாணி போல மீடியா வட்டாரத்தில் பிரியதர்ஷினின் மகன் சித்தார்த் பெரிய அளவிற்கு வெளிச்சம் பெறவில்லை. காரணம் அவர் நடிப்பிலோ டைரக்ஷனில் கவனம் செலுத்தாமல் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதில் தான் கவனம் செலுத்தி வந்தார். வெளிநாட்டிற்கு சென்று இதற்காக படிப்பெல்லாம் படித்து வந்த சித்தார்த் தனது தந்தை இயக்கிய வரலாற்று படமான மரைக்கார் படத்தில் கூட விஎப்எக்ஸ் பணிகளை கவனித்தார்.
கடந்த 2023ல் சித்தார்த்துக்கும் அவரது தோழி மெர்லின் என்பவருக்கும் எளிமையான முறையில் அவர்களது அபார்ட்மெண்டில் திருமணம் நடைபெற்றது. இதில் பிரியதர்ஷன் அவரது, முன்னாள் மனைவி லிஸி, கல்யாணி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளும் சில நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்,
சமீபத்தில் கல்யாணி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் பிரியதர்ஷன் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் கல்யாணியின் பின் பக்கமாக பிரியதர்ஷன் மற்றும் வலது, இடது புறங்களில் மகனும் மருமகளும் நிற்கின்றனர், மகன் கையில் குழந்தையுடன் நிற்கிறார். இதன் மூலமாக இயக்குனர் பிரியதர்ஷன் தாத்தாவாக ஆகி உள்ளார் என்கிற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் கூட ஆச்சரியமாக பிரியதர்ஷன் தாத்தாவாகி விட்டாரா என்கிற கேள்வியை கேட்டு வருகின்றனர்.