ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம், ஹிந்தி என இரண்டு மொழிகளில் மாறி மாறி படங்களை இயக்கி வருகிறார். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அவரை வைத்து கிட்டத்தட்ட 33 படங்களுக்கு மேல் இயக்கிவிட்டார் பிரியதர்ஷன். அதேபோல பாலிவுட்டில் பெரும்பாலும் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்த படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது கூட 'ஹைவான்' என்கிற படத்தை அக்ஷய் குமாரை வைத்து தான் இயக்கி வருகிறார்.
அதே சமயம் 2000 துவக்கத்தில் சல்மான்கானை வைத்து இரண்டு படங்களையும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தையும் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது, நிருபர் ஒருவர் இவரிடம் பத்மஸ்ரீ விருது கிடைத்ததை பெரிய சாதனையாக நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக இல்லை.. கோவிந்தாவும் சல்மான் கானும் இணைந்து நடித்த ஒரு படத்தை இரண்டு ஷெட்யூல்களுக்குள் என்னால் முடிக்க முடிந்தது. அதைத்தான் மிகப்பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். காரணம் அவர்கள் சரியான நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார்கள் என்று அப்போது பேச்சு இருந்தது.
ஆனால் இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். என்னுடைய படப்பிடிப்பிற்கு காலை 7 மணிக்கே வந்து விடுவார்கள். ஆனால் அப்போது சல்மான்கான் என்னிடம், “சார் நீங்கள் என்னை வைத்து அடுத்த படத்தை இயக்கினால் நிச்சயமாக நான் செட்டுக்கு காலை 5 மணிக்கெல்லாம் வரமாட்டேன்” என்று கூறியதாக சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.