ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அதிகளவில் படங்களில் நடிக்காமல் குறிப்பிட்டு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. கதைகள்தான் எல்லாத்தையும் முடிவு செய்கிறது. எந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தந்து எழுதுறாங்க அதில் யாருக்கு பிசினஸ் உள்ளது போன்ற விஷயங்களும் அதில் உள்ளது. இப்படி படங்களில் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுத்துவிட்டால் அது நல்ல படம். சிலசமயங்களில் பெரிய ஹீரோக்கள் படங்கள் கூட லாபம் தருவது இல்லை. ஆனால், சில சின்ன படங்கள் பெரிய லாபம் ஈட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.




