பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 19 நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கடந்த செப்., 3 ம் தேதி நடந்த 11 வது எபிசோடில் புகழ்பெற்ற அக்னிபாத் மற்றும் கோரி தேரே பியார் மெய்ன் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்தப் பாடல்களை பயன்படுத்தும் உரிமையை தங்களைக் கேட்காமல் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பிபிஎல் நிறுவனம், இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் எண்டமோல் நிறுவனத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அவர்களது வழக்கறிஞர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்த பாடல்களின் உரிமையை தாங்கள் சோனி மியூசிக் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதாகவும் அதேசமயம் பொதுவெளியில் இந்த பாடலை பயன்படுத்தும் உரிமை தங்களது பிபிஎல் இந்தியா நிறுவனத்திற்கு மட்டுமே இருப்பதாகவும் காப்பிரைட் சட்ட விதிகளை மீறி அனுமதியின்றி இந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.