‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் 57 வயது ஆகியும் இந்திய சினிமாவின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராகவே வலம் வருகிறார். பெரும்பாலும் அவர் ஒரு பிளேபாய் ஆகவே மீடியாக்களால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். அதற்கேற்றபடி தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் டேட்டிங், காதல் கிசுகிசு போன்றவற்றிலும் சிக்கியவர் தான் சல்மான்கான்.. ஆனால் சல்மான்கானை பொறுத்தவரை பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாகவும் அதேசமயம் கண்டிப்பாகவும் இருக்க கூடியவர் என்கிற புது தகவலை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகையான பாலக் திவாரி.
சல்மான்கான், பூஜா ஹெக்டே நடிப்பில் வரும் ஏப்-21ல் வெளியாகவுள்ள 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலக் திவாரி. இந்தப்படத்தில் நடிகையாகவும், இதற்கு முன்னதாக சல்மான்கான் நடிப்பில் வெளியான ஆண்டிம் என்கிற படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர் இவர். இந்த படங்களின் படப்பிடிப்பின்போது சல்மான்கான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பெண்களுக்கு, குறிப்பாக கதாநாயகிகளுக்கும் சேர்த்து ஒரு உத்தரவு போட்டாராம்.
அதாவது பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களின் கழுத்துக்கு கீழே இறங்கி இறங்கி இருக்க கூடாது என்றும் கழுத்து வரை மூடிய ஆடைகளையே அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினாராம் சல்மான்கான். காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டி இருந்தாலும் கூட காட்சி முடிந்தபின் இந்த விஷயத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம் சல்மான் கான்.
இதுபற்றி கூறியுள்ள நடிகை பாலக் திவாரியும் தினசரி படப்பிடிப்புக்கு கிளம்பும்போதெல்லாம் இப்படி கழுத்து வரை மூடிய ஆடை அணிந்து சென்றராம். இதை பார்த்துவிட்டு அவரது அம்மாவே ஏன் இப்படி உடையணிந்து செல்கிறாய் என சந்தேகப்பட்டு கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது என கூறியுள்ள பாலக் திவாரி, பெண்களின் பாதுகாப்புக்காகவே சல்மான்கான் இப்படி நடந்து கொண்டார் என்றும் அவர்களது உரிமைகளை பறிக்கும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறியுள்ளார்.