சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவாகியுள்ள தீபிகா படுகோனே, திருமணத்திற்கு பிறகும் உடல் கட்டை பிட்டாக பராமரித்தபடி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர், அதையடுத்து அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
தீபிகா கூறுகையில், சில படங்களில் நடிக்க பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லியும் நான் மறுத்து விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை சம்பளம் மட்டுமே முக்கியம் இல்லை. எனக்கான ரோல் அழுத்தமாக இருக்க வேண்டும். கமர்சியலாக இருந்தாலும் அது பெரிய ரோலாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக அந்த கதையை சொல்லும் இயக்குனர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டுதான் ஒரு படத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பெரிய சம்பளத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு எந்த படத்தையும் நான் ஏற்பதில்லை என்று கூறி இருக்கும் தீபிகா படுகோனே, சிலர் சமூகத்துக்கு மெசேஜ் சொல்வதாக என்னிடத்தில் வருகிறார்கள். ஆனால் அப்படி அந்த இயக்குனர்கள் சொல்லக்கூடிய மெசேஜ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதையும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன். அதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அந்த படங்களை ஏற்கிறேன். இல்லாதபட்சத்தில் அந்த படங்களை தவிர்க்கிறேன். இதனால் என் மீது விமர்சனங்கள் எழுதுகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.