டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவும், இல்லை, இல்லை நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன. அதற்கடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
தீபிகா, ரன்வீர் சிங் தம்பதியினருக்கு ஒரு வயதியில் பெண் குழந்தை உள்ளது. குழந்தையையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது என அவர் கறாராக சொல்லிவிட்டார், அதனால்தான் அவரைப் படத்திலிருந்து நீக்கினார்கள் என்ற ஒரு பரபரப்பு எழுந்தது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து தீபிகா, “100 கோடி அல்லது ரூ. 500-600 கோடி படங்கள் என்பது இனிமேல் யோசிக்கத் தேவையில்லை. சில சமயங்களில் அதிக பணம் கொடுத்து அது போதும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது போதாது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை போதும். ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே உங்கள் சிறந்ததை கொடுக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.