இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படம் தற்போதைக்கு 'ஏஏ-22 ஏ-6' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது அல்லு அர்ஜூனின் 22வது படம், அட்லியின் 6வது படம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தீபிகாவின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் தான் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லியை மசாலாவின் ராஜா என்று பாராட்டியுள்ளார். அதோடு அட்லியின் தனித்துவமான பார்வை மற்றும் படைப்பாற்றல் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கி வரும் படத்தில் சிலிர்ப்பூட்டும் காட்சிகள் மற்றும் இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத கதையுடன் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது.
விஜய் நடிப்பில் அவர் இயக்கிய 'மெர்சல்' படத்திலிருந்தே நான் அட்லியின் ரசிகராகி விட்டேன். இந்திய சினிமாவில் மிகவும் உற்சாகமாக திறமையான ஒரு இயக்குனர் அட்லி. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.