சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷக் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'துரந்தர்'. இப்படம் நான்கு நாட்களில் நிகர வசூலாக 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ரன்வீர் சிங்கின் முந்தைய பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம்.
இந்த ஆண்டில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த ஹிந்திப் படமான 'சாயாரா' 31 கோடியைப் பெற்றது. 'துரந்தர்' 28 கோடியைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. 26/11 தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இந்திய ஏஜென்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதைச் சுருக்கம்.
இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகி இருப்பவர் சாரா அர்ஜுன். தமிழில் 'தெய்வத் திருமகள், சைவம்' படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங், சாரா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வந்த போது இந்த ஜோடியின் வயது வித்தியாசம் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அது மறைந்து போனது.
மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை 130 கோடிக்கு நெட்பிளிக்ஸ் பெற்றுதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ரன்வீர் சிங்கின் படம் ஒன்று இந்த அளவிற்கு ஓடிடி உரிமைக்கு விற்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை. வருடக் கடைசியில் ஒரு ஹிட் படம் வந்துள்ளதால் பாலிவுட்டினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.