சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‛வா வாத்தியார்' படம் இன்று(டிச., 12) ரிலீஸாக வேண்டியது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெற்ற கடன் பிரச்னையால் கோர்ட் உத்தரவால் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. முன்னதாக இப்பட ரிலீஸையொட்டி கார்த்தி பல பேட்டிகளை அளித்தார். அதில் ஒரு பேட்டியில் அவரது முந்தைய படமான மெய்யழகன் குறித்து பேசி உள்ளார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு விமர்சகர்கள் குறித்து பிரேம்குமார் கடுமையாக பேசியதை கேள்வியாக எழுப்பினர்.
அதற்கு கார்த்தி கூறியதாவது : ‛‛இயக்குனர் பிரேம்குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபப்படவில்லை. ஆனால், அந்த படத்தை முதிர்ச்சியற்ற சில யுடியூபர்கள் செய்த விமர்சனங்கள் மீது தான் கோபப்பட்டார். மெய்யழகன் திரைப்படம் இதைவிடப் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. அது போன்ற படங்களைத் தயாரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களை இது ஊக்குவித்திருக்கும். அது நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.