சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஹிந்தியில் ஷாருக்கானின் கிங் படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, அதையடுத்து அட்லி, அல்லு அர்ஜுன் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் திரையுலகில் 8 மணிநேரம் வேலை என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்ன ஒரு கருத்து விவாதங்களை ஏற்படுத்தியது.
சந்தீப் ரெட்டி வங்கா, தான் இயக்கும் ஸ்பிரிட் படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திய போது 8 மணி நேரம் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதிபடக் கூறினார். இதனால் அவரை அப்படத்திற்கு ஒப்பந்த செய்வதை அவர் கைவிட்டார். அதையடுத்து, தீபிகா படுகோனே சொன்ன இந்த 8 மணி நேர வேலை என்பதற்கு ராஷ்மிகா மந்தனாவும் ஆதரவு தெரிவித்தார்.
இப்படியான நிலையில் தற்போது தீபிகா படுகோனே அளித்துள்ள ஒரு பேட்டியில், திரை உலகில் எட்டு மணி நேரம் வேலை என்பதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அதோடு வாழ்க்கையில் மூன்று அத்தியாவசியங்களை அனைவரும் முன்னுரிமைப்படுத்த வேண்டும். அதாவது, தூக்கம், உடல் பயிற்சி மற்றும் சத்தான உணவு இவை சரியானபடி கிடைத்தால்தான் நாம் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதனால் திரை உலகினர் நடிகர், நடிகைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.