சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தற்போது முன்பதிவு டிக்கெட் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் இந்த படம் வெளிநாடுகளையும் சேர்த்து இதுவரை டிக்கெட் முன்பதிவில் 20 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதோடு ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அடுத்து வரப்போகும் நாட்களில் இன்னும் பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்காக அனிருத் இசையில் உருவான மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், கடந்த 27ஆம் தேதி மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதியான நாளை மாலை ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள்.
இதனிடையே ஜனநாயகன் படத்திலிருந்து 3வது பாடலாக ராவண மவன்டா என்ற பாடலை இன்று மாலை 7:50 மணியளவில் வெளியிடுகின்றனர்.