கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக இருந்து 'டியூட்' படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளவர் கீர்த்திஸ்வரன். பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடித்துள்ள இந்த 'டியூட்' படம் 5 நாளில் 95 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர். படத்தின் வெற்றியை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் படக்குழு நடத்தியது. இதில் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய சரத்குமார், '' 'டியூட்' படத்தில் பார்க்கும்படிதான் நிஜ வாழ்க்கையிலும் ஜாலியான ஆள்தான் நான். என் உடலை பார்த்து கோபக்காரன் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என்னை சரியாக காண்பித்த இயக்குனர் கீர்த்திக்கு நன்றி. பலரும் எனக்கு போன் செய்து அப்பாவாக, தாத்தாவாக நடிக்க கூப்பிடுவார்கள். நான் முடியாது என சொல்லிவிடுவேன். அதுபோல, இயக்குனர் கீர்த்தியும் என்னை அப்பாவாக நடிக்க அழைத்தார், நான் மாட்டேன் என்றேன். கதையை கேளுங்கள் பிறகு முடிவு செய்யுங்கள் என கதையை சொன்னார்.
ஹீரோவாகதான் நடிப்பேன் என்றெல்லாம் கேட்கவில்லை, கதையில் ஒரு முக்கியமான ரோல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த படத்தில் கூட தீபிகா படுகோனேவைக் கதாநாயகியாக போட்டு என்னை 'டான்ஸ்' ஆட சொன்னாலும் நான் ரெடி. ஏனெனில் ஐஸ்வர்யா ராய் கூடவே நடித்துவிட்டேன். எனவே யாரும் பொறாமைப்பட வேண்டாம்'' எனப் பேசினார்.