விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

2025ம் ஆண்டின் 10வது மாதம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. இத்தனை வாரங்களில் தமிழில் இதுவரையில் 210 படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாகின. அதனால், இந்த வாரம் நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23ம் தேதியில் புதிய படங்கள் வெளியீடு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அதே சமயம் அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி “ஆண் பாவம் பொல்லாதது, ஆர்யன், ராம் அப்துல்லா ஆண்டனி' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சில படங்கள் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
2025ம் ஆண்டில் இதுவரை கடந்து போன வாரங்களில் இடைவெளியே இல்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் ஏதாவது படங்கள் வெளியாகி வந்தன. இந்த வாரம் மட்டும் ஒரு இடைவெளி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கிடைக்கும் இடைவெளியில் படத்தை வெளியிட்டால் போதும் என யாராவது முன்னறிவிப்பு இல்லாமல் நாளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.