பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2026 பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே போட்டியாக வெளியாகின்றன.
ஆனால், தெலுங்கில், ஜனவரி 9ம் தேதி பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்', ஜனவரி 12ம் தேதி சிரஞ்சீவி நடித்துள்ள 'மன ஷங்கர வரபிரசாத் காரு', ஜனவரி 13ம் தேதி ரவிதேஜா நடித்துள்ள 'பர்த மஹாசாயுலகு விக்ஞாபதி', ஜனவரி 14ம் தேதி சர்வானந்த் நடித்துள்ள 'நரி நரி நந்த முராரி', நவீன் பொலிஷெட்டி நடித்துள்ள 'அனகனகா ஒக ராஜு' ஆகிய படங்களும் வெளியாகின்றன. இத்தனை படங்கள் வெளியானாலும் அங்கு எந்த ஒரு நடிகரும் போட்டி நடிகரின் படம் வருவது பற்றி எந்தவிதமான குறையும் சொல்லவில்லை.
ஆனால், தமிழில் 'பராசக்தி' படம் வெளிவருவது விஜய் ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி 'ஜனநாயகன்' இயக்குனர் வினோத் கூட மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் அதே நாளில் ஐதராபாத்தில் நடந்த 'த ராஜா சாப்' படத்தின் நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், ”சங்கராந்திக்கு வெளியாகும் ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற வேண்டும். அவற்றோடு தன்னுடைய படமும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. முக்கியமாக சீனியர்ஸ் சீனியர்ஸ் தான். அவர்களிடமிருந்துதான் நாம் அனைத்தையும் கற்றுக் கொள்கிறோம். அவர்களுக்குப் பின்னால் மட்டும்தான் நாம்,” என்றார். அவரது பெருந்தன்மையான பேச்சு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
பராசக்தி' படக்குழுவினர் யாரும் இதுவரையில் 'ஜனநாயகன்' படம் குறித்து எந்தவிதமான எதிர்மறையான பேச்சுக்களையும் பேசவில்லை. அப்படியிருக்கும் போது விஜய் ரசிகர்கள் 'பராசக்தி' குழுவினரையும், குறிப்பாக சிவகார்த்திகேயனையும் சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சிப்பதை இன்னும் நிறுத்தவில்லை.