பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோ பிரபாஸ். பாகுபலி வெற்றிக்குபின் அவர் இந்திய சினிமாவிலும் பிரபலம் ஆனார். அடுத்து அவர் நடித்த 'கல்கி ஏடி 2898' படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், அவரின் 'சலார், சாஹோ, ஆதிபுருஷ்' படங்கள் சரியாக போகவில்லை. இதனால், டிராக் மாற நினைத்தவர் இப்போது பேய்க்கதைக்கு மாறியிருக்கிறார்.
மாருதி இயக்கத்தில் அவர் நடித்த 'தி ராஜா சாப்' என்ற படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9ல் ரிலீசாகிறது. இது பக்கா பேய்கதை, ஒரு பெரிய பங்களா, ராஜா, அதற்குள் நுழையும் பிரபாஸ், ராணி நிதி அகர்வால் என கதை செல்கிறதாம். கிட்டத்தட்ட சுந்தர்.சி நடித்த 'அரண்மனை' பட பாணியில் அந்த கதை உருவாகி இருப்பதாக தகவல். நிதி அகர்வால் தவிர, மாளவிகா மோகனன், ரித்திகுமார் என இன்னும் இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருக்கிறார்கள்.
வில்லனாக பாபி தியோல் நடிக்க, தமன் இசையமைக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள தி ராஜா சாப், தெலுங்கு தவிர, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியிலும் ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் ஒரு பெரிய ஹீரோ பேய்க்கதைக்கு மாறியுள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் தெலுங்கு சினிமா ஆக் ஷனில் இருந்து இந்த மாதிரி கதைக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.