விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

விஷ்ணு விஷால் நடிப்பில் நாளை (31ம் தேதி) வெளியாக உள்ள படம் 'ஆர்யன்'. அவரே தயாரித்தும் உள்ளார். தமிழில் தயாரானாலும் தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளிவருவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கில் நாளை பாகுபலி படத்தின் தொகுப்பு படமான 'பாகுபலி: தி எபிக்' படமும், ரவி தேஜாவின் 'மாஸ் ஜாத்ரா' படமும் வெளியாவதால் தனது 'ஆர்யன்' தெலுங்கு ரிலீசை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெலுங்கு ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில்... 'பாகுபலி: தி எபிக்' மற்றும் 'மாஸ் ஜாத்ரா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதனை கணக்கில் கொண்டு நவம்பர் 7ம் தேதி 'ஆர்யன்' வெளியாகும். சினிமா என்பது போட்டி அல்ல, அது ஒரு கொண்டாட்டம். கொண்டாட்டங்களுக்கு அவற்றின் சொந்த இடமும் வெளிச்சமும் தேவை, என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தினை விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ளார். முழுக்க சைக்கோ த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது.