விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் சேர்த்து 170க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். ரஜினி 75வயதை தொடப்போகிறார். இந்த வயதில் இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ ரஜினி தான். இந்நிலையில் ஜெயிலர் 2வுக்குபின், சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். அதற்கடுத்து கமல் தயாரிக்கும் படத்தில், அவருடன் இணைந்து நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு இன்னமும் இயக்குனர் முடிவாகவில்லை. அதுதான் அவரின் கடைசி படம் என்று கோலிவுட்டில் சிலர் பற்ற வைக்க, அது பற்றி எரிகிறது.
இந்த செய்தி ரஜினி ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்தால், கடந்த பல ஆண்டுகளாக இதுதான் ரஜினியின் கடைசி படம் என்ற செய்தி அவ்வப்போது வரும், போகும். ஏன், ரஜினி கூட சினிமா போதும் என்று மனரீதியாக முடிவெடுத்து இருக்கிறார். ஆனாலும், ரஜினியால் நடிக்காமல் இருக்க முடியாது. ஒரு படம் வெற்றி அடைந்தவுடன் அல்லது நல்ல கதை கிடைத்தால் அடுத்த படத்தில் நடிக்த ஆர்வமாகிவிடுவார். அவரால் நடிக்காமல் வீட்டில் சும்மா இருக்க முடியாது.
எந்த இடத்திலும் அவர் இதுதான் கடைசி படம், இந்த படத்துக்குபின் நடிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. ரஜினியை வைத்து படம் தயாரிக்க, இயக்க ஏகப்பட்டபேர் கியூவில் நிற்கிறார்கள். ஆகவே, கமல் படம் கடைசி என்பது தவறான செய்தி. அவர் இன்னும் பல ஆண்டுகள் நடிப்பார். அதுவும் ஹீரோவாக நடித்துக் கொண்டே இருப்பார்கள் என்கிறார்கள்.