ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

சத்யா மூவீஸ் தயாரித்த படங்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அந்த படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றன. சத்யா மூவீஸ் நிறுவனம் ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கையை, அவர் புகழை சொல்லும் வகையில் ஆர்எம்வி - தி கிங் மேக்கர் என்ற டாக்குமெண்ட்ரி படத்தை உருவாக்கி உள்ளார் அவர் மகன் தங்கராஜ் வீரப்பன்.
அவர் கூறுகையில் 'அப்பாவின் சாதனைகளை, புகழை சொல்லும் இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு கொடுத்தார்கள். முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலர் அப்பா பற்றி, அவருடனான அனுபவங்கள் குறித்து பேசினார்கள். இந்த டாக்குமென்ட்ரியில் இளையராஜா பாடல்கள் வருகிறது. அதற்கு தடையில்லை. காரணங்கள், அவை எங்கள் பட பாடல்கள். சத்யா மூவீஸ் படம் தயாரிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது. நாங்களும் அதற்கு முயற்சிக்கிறோம்.
ரஜினியை வைத்து நாங்கள் தயாரித்த பாட்ஷா பெரிய ஹிட் ஆனது. மீண்டும் அவரை வைத்து படம் தயாரிக்க முயற்சிப்போம். அதற்கான கதை தயார் பண்ணிட்டு இருக்கிறோம். சத்யா மூவீஸ் தயாரித்த பாட்ஷா படம் ரீ ரிலீஸ் ஆனது. அடுத்து எம்ஜிஆரின் இதயக்கனி ரீ ரிலீஸ் ஆகி, 200 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து எம்ஜிஆரின் காவல்காரன் பட ரீ ரிலீஸ் டிரைலரை அவர் நினைவுநாளில் வெளியிடுகிறோம்.
அடுத்து ரஜினியின் மூன்று முகம் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. எங்கள் படங்களை ரீ மாஸ்டர் பண்ணிக்கொண்டு இருக்கிறோம். என் தந்தை வாழ்ந்த, எங்கள் வீடு இருக்கும் சென்னை தி.நகர் தெருவுக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கணும். நாங்கள் கேட்டு இருப்போம்னு உங்களுக்கு புரிந்து இருக்கும். முதல்வர் தக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
சென்னை தி.நகர் திருமலை பிள்ளை சாலைக்கு அவர் பெயர் வைக்க வேண்டும். அறநிலைத்துறைக்கு அவர் பல சாதனைகள் செய்ததால், அந்ததுறையில் ஒரு கட்டத்துக்கு ஆர்எம்வி பெயர் சூட்ட வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். அந்த வீட்டில்தான் பல அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டன. எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. நான் வெளிநாட்டில் படிக்க சென்றுவிட்டேன்'' என்றார்.