என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் 'தேவரா' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரணுடன் 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராம்சரணுடன் நடித்த அனுபவம் குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், ''ராம்சரணை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான ஆற்றல் கொண்ட ஜென்டில்மேன். விடாமுயற்சியும் நேர்மையும் கொண்டவர். ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு மாணவரை போலவே படப்பிடிப்பு தளத்துக்கு வருவார். அவரது அந்த எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நிறையவே ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் இப்படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் புச்சி பாபு'' என்கிறார் ஜான்விகபூர்.