இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! |

நடிகை ஷோபனா மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் கலக்கியவர் . தற்போது குறிப்பிட்ட சில படங்களில் அவரின் கதாபாத்திரத்தை மனதில் வைத்து மட்டுமே படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மோகன்லால் உடன் அவர் நடித்த தொடரும் படம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. ஏற்கனவே இந்த படத்தில் சிவராஜ் குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்போது இவர்களுடன் இணைந்து நடிகை ஷோபனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




