பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குநர் அனந்த மஹாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலோக உள்ளிட்டோர் நடித்துள்ள ஹிந்தி படம் புலே. ஜாதி மற்றும் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக போராடிய ஜோதிராவ், சாவித்ரி புலே தம்பதியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படம், ஜோதிராவ் புலேவின் 198வது பிறந்த நாளான ஏப்., 11ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த படத்தில் பிராமணருக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக சில பிராமண அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய தணிக்கை வாரியமும் ஒருசில காட்சிகளை நீக்குமாறு இயக்குநரை அறிவுறுத்தியது. இதையடுத்து, புலே படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், பிரபல ஹிந்தி பட இயக்குநரும், லியோ, மஹாராஜா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவருமான அனுராக் காஷ்யப் புலே படத்துக்கு ஆதரவாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
மோசடி அமைப்பு
அதில், 'பிராமணர்கள் புலே படத்தை ஏன் எதிர்க்கின்றனர்? ஜாதியை ஒழித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, ஜாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்? ஜாதிகளே இல்லையெனில் சாவித்ரிபாய், ஜோதிராவ் புலே ஏன் போராடினர்? திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு மோசடி அமைப்பு. இந்தியாவில் ஜாதி இருக்கா... இல்லையா என்று அனைவரும் கூடி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என, பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பலரும் கேள்வி கேட்டு வந்ததால் கடுப்பான அனுராக் காஷ்யப், பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்தார். இதற்கு, பிராமண அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப், அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன் கருத்துக்கு அவர் நேற்று மன்னிப்பு கோரியுள்ளார்.
கொலை மிரட்டல்
அவர் கூறியுள்ளதாவது: இது என் மன்னிப்பு. ஆனால், இது என் பதிவுக்காக அல்ல. முக்கியமானவற்றை விட்டுவிட்டு ஒரு வரியை எடுத்துக்கொண்டு வெறுப்பைப் பரப்புகின்றனர். நான் பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். என் குடும்பம் எதுவுமே சொல்லவில்லை. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால் இதோ இங்கிருக்கிறது.
ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்களிடம் இருந்து என் மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களுக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவது சரியில்லை. பிராமணர்களே தயவுசெய்து பெண்களை விட்டுவிடுங்கள். மனுஸ்மிருதி உட்பட அனைத்து வேதங்களும் கண்ணியத்தை கற்பிக்கின்றன. நீங்கள் உண்மையில் எந்த வகையான பிராமணர்கள் என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.