ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடித்தார். இவர் ஜாகீர் இக்பால் என்பவரை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 23ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டார் சோனாக்ஷி. அந்த வீடியோவின் கீழ் ஒரு ரசிகர், உங்களது விவாகரத்து நாள் நெருங்கி விட்டது என்று ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார்.
இதனால் கோபமான சோனாக்ஷி சிங்கா, ‛‛முதலில் உன்னுடைய அப்பா அம்மாதான் விவாகரத்து செய்வார்கள். அதன் பிறகுதான் நாங்கள், இது சத்தியம்'' என்று அந்த ரசிகருக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் சோனாக்ஷி. இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.