மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா |

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப். தற்போது நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா, லியோ, விடுதலை 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் 'அன் கில் 123' என்கிற படத்தில் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, 100 போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இந்த படத்தில் சமூக வலைதள இன்ப்ளூயன்சர் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடிக்கின்றாராம். சமூக வலைதளம் மூலம் பிரபலமான நபரை வலைதளவாசிகள் ஒன்றிணைந்து அவரை தாக்கும்போது அந்த நபர் என்ன ஆவார் என்பது குறித்து தான் கதைக்களம் நகரும் என கூறப்படுகிறது.




