சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

2025ம் ஆண்டை பொறுத்தவரையில் 285 படங்கள் வந்துள்ளன. இதில் 12 சதவீத படங்களே வெற்றி என கணக்கு சொல்லப்படுகிறது. 2025ம் ஆண்டின் முதல் வெற்றியை 'மதகஜராஜா' பதிவு செய்தது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்த இந்த படம் 12 ஆண்டுக்கு பின், ஜனவரி 12ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் 50 கோடிக்குமேல் வசூலை அள்ளி முதல் வெற்றியை பதிவு செய்தது.
அடுத்து 'கூலி, குடும்பஸ்தன், மாமன், பறந்து போ, டிராகன், தலைவன் தலைவி, பைசன், மிடில்கிளாஸ்' ஆகிய படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்குபின் எந்த படமும் ஓடாமல் இருந்தது. கடந்த வாரம் வெளியான அதுவே, இந்த ஆண்டின் கடைசி வெற்றி படமா என்று பலரும் நினைத்திருந்த நிலையில், 'சிறை' அந்த இடத்தை பிடித்துள்ளது. கடந்தவாரம் வெளியான 'சிறை' வணிக ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.
220 தியேட்டரில் வெளியாகி, இதுவரை 8 கோடி வரை வசூலித்துள்ளது. ஜனவரி 9 வரை வேறு பெரிய படங்கள் இல்லாத நிலையில் படத்துக்கு இன்னும் வசூல் அதிகரிக்கும். நல்ல விமர்சனங்கள் காரணமாக சாட்டிலைட், டிஜிட்டல் மற்ற பிஸினசில் சிறைக்கு நல்ல வரவேற்பு. ஆகவே, படத்தை தயாரித்த லலித்குமார் மகிழ்ச்சி. தவிர, அவர் மகன் அக்ஷய் ஹீரோவாக அறிமுகம் ஆன முதல் படமே வெற்றி என்பதால் கூடுதல் மகிழ்ச்சி என்கிறார்கள்.
'மாஸ்டர், லியோ' படங்களை தயாரித்த வகையில், விஜயின் திருமண மண்டபங்களை நிர்வகித்த வகையில் லலித்தும், விஜயும் நல்ல நண்பர்கள். ஆகவே,விரைவில் சிறை குறித்து, அக்ஷய் குறித்து விஜய் பாராட்டுவார் அல்லது படக்குழுவை நேரில் அழைத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.