ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகையரில் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஊர்மிளா மடோன்கர்.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து 1996ம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்' தமிழ் படத்தின் மூலம் ஊர்மிளா கதாநாகியாக அறிமுகமானார். அதற்கு முன்பே ஹிந்தி, தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இருந்தாலும் 1995ல் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ஆமிர்கான் நடித்த 'ரங்கீலா' படத்தில் ஊர்மிளாவின் அழகிலும், கிளாமரிலும் மயங்கினர் அன்றைய 90ஸ் இளைஞர்கள். அப்படத்தின் பாடல்களை ஹிந்தியிலும் ரசித்தார்கள், தமிழிலும் ரசித்தார்கள். அதற்கு ரஹ்மான் இசை மட்டும் காரணமல்ல, ஊர்மிளாவும் ஒரு காரணம். 'இந்தியன்' படத்தின் பாடல்களிலும் தனது நடனத்தால் அசத்தியவர்.
அந்த ஒரே படத்துடன் தமிழ் சினிமாவுக்கு 'குட் பை' சொல்லிவிட்டார். இன்ஸ்டா தளத்தில் நேற்று சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் ஊர்மிளா. அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அவருக்கு 51 வயது என்று நிச்சயம் சொல்ல மாட்டார்கள். இதே ஹாலிவுட்டாக இருந்திருந்தால் ஊர்மிளா இன்னமும் கதாநாயகியாகத்தான் தொடர்ந்திருப்பார்.
இங்கு ஆண்கள் 70 வயதைக் கடந்தாலும் கதாநாயகனாக 25 வயதுள்ள மகள் வயது பெண்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். ஆனால், கதாநாயகிகளுக்கு வயதாகிவிட்டது என்று வாய்ப்பு தர மாட்டார்கள்.