இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
மராத்திய திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் ஊர்மிளா கோத்தாரி. மராத்திய படங்களைத் தவிர ஹிந்தியிலும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் உள்ள கண்டிவாலி என்கிற பகுதியில் தனது காரில் வந்துகொண்டிருந்தார். காரை இவரது டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்கே மெட்ரோ ரயில் வேலைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு ஊழியர்கள் மீது மோதி நின்றது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு ஊழியர் பலியானார். இன்னொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம் காரின் முன் பகுதியும் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. விபத்து ஏற்பட்டதுமே டிரைவர் மற்றும் நடிகை ஊர்மிளா அமர்ந்திருந்த முன் பகுதியில் இருந்து ஏர் பேக் அவர்களை மூடியதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய அளவு காயங்களுடன் தப்பினர். போலீசார் தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.