ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பாலக்கோடு: தருமபுரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் காயம் அடைந்தார். அவரின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர், கேரளாவை இருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். தருமபுரியின் பாலக்கோடை அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் டாம் சாக்கோ அண்மையில் போதைப் பொருளை பயன்படுத்தி, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்துள்ளார்.