பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், தமிழில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சந்திரமுகி, ஒஸ்தி, சமீபத்தில் வெளியான மதகஜராஜா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களின் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் கடந்த 2020ல் கொரோனா முதல் அலையின் போது எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த பணத்தில் பல்வேறு விதமான உதவிகளை செய்து ரியல் ஹீரோ என்கிற பெயரையும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெற்றார்.
சமீபத்தில் மும்பை, நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்த சோனு சூட்டின் மனைவி சோனாலி விபத்தில் சிக்கினார். உடனடியாக நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். தற்போது தனது மனைவியின் உடல்நிலை குறித்து சோனு சீட் வெளியிட்டுள்ள தகவலில், “என் மனைவி நன்றாக இருக்கிறார். மிகப்பெரிய விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.. ஓம் சாய்ராம்” என்று கூறியுள்ளார்.
சோனு சூட்டுக்கும், சோனாலிக்கும் 1996ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அயான் மற்றும் இஷாந்த் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.