நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
தற்போது நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' என்ற கேங்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் 'கேஜிஎப்' நாயகன் யஷ். 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் யஷூடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் நடித்து முடித்துவிட்ட யஷ், இந்த வாரம் மும்பையில் நடைபெறும் 'ராமாயணா' ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் ரன்வீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வந்த நிலையில் அடுத்து யஷூம் அவர்களுடன் இணைகிறார். அதோடு ராமாயணா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, உஜ்ஜியினியில் உள்ள புனிதமான ஸ்ரீ மகாலேஷ்வர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் யஷ்.
இப்படத்தில் ராவணனாக வில்லன் வேடத்தில் நடிக்கும் யஷ் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போது அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த ராமாயணா படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.