திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால் | மம்முட்டியின் களம்காவல் படம் சர்வதேச வசூலில் புதிய சாதனை | கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம் | மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல் செய்தி | மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போகும் கருப்பு படம்! | ‛டாக்ஸிக்' படத்தில் நாடியாவாக கியாரா அத்வானி! | நானிக்கு ஜோடியாகும் கயாடு லோகர்! | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்கள், டீசர்கள் | படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை |

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சச்சின். இந்த படம் அப்போது 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்த படத்தை ரீரிலீஸ் செய்துள்ளார்கள். அந்த வகையில் இப்படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் இதுவரை 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதோடு தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து கொண்டிருப்பதால் இப்படம் இன்னும் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே ரீரிலீஸ் செய்யப்பட்டு அதிகப்படியாக வசூலித்த 'தளபதி, கில்லி, பாபா, ஆளவந்தான்' போன்ற படங்களின் பட்டியலில் இந்த சச்சின் படமும் இடம்பெறப்போகிறது.