மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது |

தமிழில் 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, அவ்வபோது துணிச்சலாக சில விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை கிளப்புவார் அல்லது படங்களில் துணிச்சலாக நிர்வாண காட்சிகளில் கூட நடித்து பரபரப்பை கிளப்புவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‛சிஸ்டர் மிட்நைட்' ஹிந்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தென்னிந்திய சினிமாவில் நிறைய நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், நான் பணியாற்றிய சில படங்களின் படப்பிடிப்பின்போது என் மார்பகங்கள் மற்றும் பின்புறம் எடுப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பேட்களை வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டேன். அது எனக்கு மிகவும் அசவுகரியமான அனுபவமாக இருந்தது. கூடுதலான பேட்களை வைக்க சொல்வார்கள். அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் உங்கள் அம்மா, சகோதரிகளிடம் இப்படி பேட் வைக்கச் சொல்வீர்களா? எனக் கேட்கத் தோன்றும். இவ்வாறு கூறினார். இவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.