திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
'கங்குவா' படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'ரெட்ரோ'. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படம் காதல் கலந்த கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ளது. வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது தனது நெற்றில் குங்குமப் பொட்டு வைத்து, கழுத்தில் மாலை அணிந்த நிலையில் அந்த கோவில் கொடி கம்பத்தில் ஒரு மணியை கட்டுகிறார் ஜோதிகா. இன்னொரு புகைப்படத்தில் அவர் நெய் விளக்கு ஏற்ற, அருகில் சூர்யா நின்று கொண்டிருக்கிறார். இதேபோல் அந்த கோவிலில் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார் ஜோதிகா.