மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது |

நடிகையும், தயாரிப்பாளருமான கண்ணாம்பா 1956ம் ஆண்டு 'நாக பஞ்சமி' என்ற ஒரு படத்தை தயாரித்து, நடித்தார். இந்தப் படத்தை கே.நாகபூஷனம் இயக்கினார். அஞ்சலி தேவி, எஸ்.வரலட்சுமி, சித்தூர் நாகைய்யா, தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் கதை அருமையாக இருந்ததால் இந்த கதையின் உரிமத்தை வாங்கி, 'நாக தேவதா' என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்தார் ஏவிஎம் செட்டியார். இதில் நாகேந்திர ராவ், ஜமுனா, சவுகார் ஜானகி நடித்தனர். ஆர்.சுதர்சனம் இயக்கினார்.
ஏவிஎம் குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி படத்தை தயாரித்து தெலுங்கில் வெளியிட்டு பெரிய வெற்றியை பெற்றது. சில பிரச்சினைகள் காரணமாக கண்ணாம்பாவால் படத்தை முடிக்க முடியவில்லை. படம் தாமதமானது. இதனால் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் தயாரித்த 'நாக தேவதா' படத்தை 'நாக தேவதை' என்ற என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டது. இங்கும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக தனது 'நாக பஞ்சமி' படத்தை ஒரு வழியாக முடித்த கண்ணாம்பா அதனை தமிழில் வெளியிடாமல் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். அங்கு படம் வெற்றி பெறவில்லை.