பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

விஜயின் ஜனநாயகன் படத்துடன் கிட்டத்தட்ட மோதுகிறது சிவகார்த்திகேயனின் பராசக்தி. ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி வருகிறது. இதனால் என்ன பாதிப்பு, யாருக்கு பாதிப்பு என்று கோலிவுட்டில் விசாரித்தால், இரண்டு பேருக்கும் பாதிப்பு ஏற்படும்.
முதலில் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி ஜனவரி 14ம் தேதியும் வருவதாக இருந்தது. தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் சந்தோஷப்பட்டனர். காரணம், இரண்டு படங்களின் வசூல் பாதிக்காத நிலை. ஜனநாயகன் ஓடி முடிந்தவுடன் பராசக்தி வர இருந்ததால், இரண்டு படங்களின் ஓபனிங் நல்லா இருக்கும், நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை ஜனநாயகன் படமும், மறுநாள் சனிக்கிழமை சிவகார்த்திகேயன் படமும் ரிலீஸ் ஆகிறது. முதலில் தியேட்டர் பிரச்னை வரும், தமிழகத்தில் 1000 ஸ்கிரீன் இருக்கிறது. இதில் யாருக்கும் அதிக படங்கள் கொடுப்பது என கேள்வி வரும். பராசக்தி படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் அவர்களுக்கு அதிக திரைகள் கிடைக்க வாய்ப்பு. ஜனநாயகன் படத்தை பல வினியோகஸ்தர்கள் இணைந்து வெளியிடுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படலாம். தவிர, சனி, ஞாயிறு வசூலை அள்ளுவதில் இரண்டு படங்களுக்கு இடையே போட்டி ஏற்படும். ரசிகர்கள் தியேட்டரில் மோதலாம், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.
பொதுவாக, சனிக்கிழமை பெரிய படங்கள் வராது. ஆனால், பராசக்தி ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இது முன்பே தெரிந்து இருந்தால் ஜனநாயகன் வேறு தேதிக்கு அல்லது ஜனவரி 14க்கு போய்விட வாய்ப்பு இருந்து இருக்கும். கடைசி நேரத்தில் இந்த மாற்றம் வந்துள்ளது. இது விஜய்க்கு வைக்கப்பட்ட செக். அதுவும் அவர் ஆதரவாளரான சிவகார்த்திகேயனை கொண்டு வைக்கப்பட்ட செக். இதற்கு பின்னால் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.