அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு | 2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு |

வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக 'பராசக்தி' படம் ஜனவரி 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன் என்ற பேச்சு எழுந்தாலும் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ள தமிழகத்தில் இரண்டு படங்கள் வெளியாவது பெரிய விஷயமல்ல. முடிவில் எந்தப் படம் நன்றாக இருக்கிறதோ அந்தப் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கும்.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த 'ஜனநாயகன்' படத்தை எப்படியாவது பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் என விஜய் தரப்பு பலத்த முயற்சிகளைச் செய்து வருகிறது. இப்போது 'பராசக்தி' படமும் போட்டிக்கு வந்துவிட்டது என்பதால் அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு விஜய் ரசிகர்களின் சண்டை சிவகார்த்திகேயனை நோக்கி அதிகமாகவே இருக்கும். அஜித்துடனும், அஜித் ரசிகர்களுடனும் மோதிய விஜய் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுடன் சண்டை போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, தெலுங்கு வெளியீட்டில் 'ஜனநாயகன்' படத்திற்கு ஒரு பின்னடைவு என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை 'வாத்தி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரபல நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியதாகத் தகவல் வெளியாகின. ஆனால், தற்போது அந்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
தெலுங்கில் பொங்கலை முன்னிட்டு, பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்', சிரஞ்சீவி நடித்துள்ள 'மனசங்கர வரபிரசாத் காரு', உள்ளிட்ட ஐந்து நேரடி தெலுங்குப் படங்கள் வெளியாக உள்ளது. அதனால், தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் 'ஜனநாயகன்' படத்திற்கு தியேட்டர்களும் கிடைக்காது என்பதால் தற்போது பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.