மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சென்னை : சென்னையில் கார் பார்க்கிங் பிரச்னையால் நீதிபதி மகனுடன் கைகலப்பில் ஈடுபட்ட பிகபாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சென்னை முகப்பேர் அருகே தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே டீக்கடை ஒன்று இருந்துள்ளது. இந்தக் கடையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, நேற்று இரவு, தன் தோழியுடன் டீ குடிப்பதற்காக, காரில் சென்றார்.
தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். இதனால், அவருக்கும், ஐகோர்ட் நீதிபதியின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், நீதிபதியின் மகன் மற்றும் அந்தப் பெண் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஜெ.ஜெ., நகர் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதி மகன் புகார் அளித்தார். நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரையும் ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதியின் மகன், அவரது தோழியை தாக்கியதாக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.