ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஒரு படத்திற்கான வெளியீட்டை அறிவித்து, அது நடக்காமல் போனால் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைப்பார்கள். ஆனால், 'இட்லி கடை' படத்தை அப்படியே ஆறு மாதத்திற்குத் தூக்கி தள்ளி வைத்துவிட்டார்கள்.
ஏப்ரல் 10ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக இன்றுதான் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார்கள். அதன்படி படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இத்தனை மாதங்கள் தள்ளி வைத்துள்ள நிலையில், இப்படம் பற்றி ஏற்கெனவே வெளியான சில சர்ச்சைகள் உண்மைதான் போல என யோசிக்க வைத்துள்ளது. கால்ஷீட் குளறுபடிகள்தான் இப்படம் சரியான நேரத்தில் முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.
அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி வியாழக் கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறை நாள். எனவே, அந்த நாளை படக்குழு தேர்வு செய்துள்ளது.
மற்ற படங்களுக்கு முன்பாக ஒரு நல்ல நாளை 'இட்லி கடை'க்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.