என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

கடந்த 2017 பிப்ரவரியில் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் இருந்து திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அது வீடியோவாக எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த கடத்தலில் பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதில் முதன்மை குற்றவாளியாக கார் கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட பல்சர் சுனில் என்பவனும் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டனர். பின்னர் அதே வருடம் ஜூலை மாதம் நடிகர் திலீப் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 88 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சம்பவம் 2017ல் நடந்திருந்தாலும் 2020 ஜனவரியில் இருந்து தான் இந்த வழக்கு குறித்த விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சூடு பிடித்தது. இடையில் சில தடங்கல்கள் காரணமாக ஆமை வேகத்தில் நகர்ந்த இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும் என எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.