ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மறுபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் அடிப்படையில் வாட்ச் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற துபாய் வாட்ச் வாரம் என்கிற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாடினர்.
அப்போது தனுஷிடம் வாட்ச் மீது உள்ள காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "நான் முதலில் காதல் கொண்ட வாட்ச் என்றால், என் பள்ளிப் பருவத்தில் அம்மா முதலில் வாங்கி தந்த அந்த பிளாஸ்டிக் வாட்ச் தான். அது பிராண்ட் வாட்ச் இல்லை. டாலருக்கும் குறைவான விலை தான். பேட்டரி செயலிழந்து நேரம் காட்டாமல் இருந்தபோதிலும் அதை கட்டிக் கொண்டு நான் பள்ளிக்கு செல்வேன். அந்த அளவிற்கு பிடிக்கும். இன்னும் அதனை பத்திரமா வச்சிருக்கேன்" என்றார்.




