10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

அரக்கோணத்தில் ஒரு ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர், சென்னை கீழ்பாக்கம் ஏரியாவில் சின்ன வீட்டில் வசித்து வந்தார். பாடகியாக இருந்தவர், ஒரு கட்டத்தில் சினிமா ஹீரோயின் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தார். உலகம் முழுக்க இசைக்கச்சேரிகள் நடத்தினார். அந்த வருமானத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெரிய வீடு வாங்கினார்.
அவர் நடித்த பிசாசு2, மனுஷி படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்க, புதுப்படங்கள் வராத நிலையில், தானே தயாரிப்பாளர் ஆகி மாஸ்க் படத்தை தயாரித்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் '' என் வீட்டை அடமானம் வைத்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறேன்'' என்றார். அந்த பேச்சு வைரல் ஆனது. மாஸ்க் படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து இருக்கும் நிலையில், வீடு அடமானம் குறித்து பலரும் பேசி வருகிறார்கள்.
சென்னையில் நேற்று பேட்டி அளித்த மாஸ்க் ஹீரோ கவின் 'அந்த வீட்டுக்கு பிரச்னை வராது. படம் நன்றாக உள்ளது என ரிசல்ட் வந்துள்ளது. 400க்கும் அதிகமான தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளது' என்றார்.
மாஸ்க் பட நிலவரம் குறித்து விசாரித்தால் தமிழில் பிக்கெப் ஆக வாய்ப்பு, அடுத்து தெலுங்கில் ரிலீஸ் ஆகலாம். படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டுள்ளது, சாட்டிலைட் நல்ல விலைக்கு போக வாய்ப்பு, மற்ற மொழி டப்பிங் ரைட்ஸ் இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ரியா வீட்டுக்கு பிரச்னை வராது. பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய சொக்கலிங்கம் என்பவருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார் ஆண்ட்ரியா.
படத்தின் பட்ஜெட் அதிகமில்லை. ஆண்ட்ரியாவுக்கு சம்பளம் கிடையாது. இயக்குனர் புதியவர், ஹீரோ கவின், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசகேர் மட்டுமே ஓரளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். ஆக, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா வீடு கை விட்டு போகாது ' என்கிறார்கள்.