சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

உலக அளவில் பிரபலமான திரை இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர். அம்மதத்தில் உள்ள சுபி வழியைப் பின்பற்றுபவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் முஸ்லிம் மதத்திற்கு மாறியதற்கான காரணத்தையும், அனைத்து மதங்களுக்கும் ரசிகன் நான் என்றும் பேசியுள்ளார்.
“சுபியசத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைப் பற்றிப் படித்தேன். அனைத்து மதங்களின் ரசிகன் நான். சூபியசம் என்பது இறப்பதற்கு முன்பு இறப்பது போன்றது. அந்தப் பாதையில் மாற்றப்பட யாரும் கட்டாயப் படுத்தப்படுவதில்லை. அப்பாதை என்னை ஆன்மிக ரீதியாக உயர்த்தியது? எனது தாயாரையும் உயர்த்தியது. நம்பிக்கையின் பொதுத் தன்மையைத்தான் நான் விரும்புகிறேன்.
மதத்தின் பெயரால் மக்களைக் கொல்லுதல் அல்லது தீங்கு செய்தல் மட்டுமே பிரச்சனையாக உள்ளது. எனது நிகழ்ச்சிகளில் வெற்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள்,” என்று பேசியுள்ளார்.
'ரோஜா' படத்திற்கு முன்பு விளம்பரப் படங்களுக்கு இசையமைத்த போது திலீப்குமார் ஆக இருந்தவர் 'ரோஜா' படத்திற்கு முன்பாக மதம் மாறி அவரது பெயரை ஏஆர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அவரது அப்பா மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் தடுமாறியதாலேயே அவர்கள் மதம் மாறினர் என்று சொல்லப்படுவதுண்டு.




