ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 'கற்றார்' (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த 'கற்றார்' தளம் குறித்து அவர் கூறுகையில், “இந்த டிஜிட்டல் தளம் இசை மற்றும் பிற கலைகளுக்கான முக்கியமான தளமாகும். குறிப்பாக தனியிசைக்கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். இதில் கலைஞர்கள் நேரடியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை பட்டியிலிட்டு பணமாக்கலாம். இந்த தளம் புதிய திறமையான கலைஞர்களுக்கு பாலமாக அமையும். எதிர்காலத்துக்கான தளமாக இது இருக்கும். புதிய ஐடியாக்களை கொண்டிருக்கும் கலைஞர்கள் அதனை உலகிற்கு அறிமுகப்படுத்த இந்த தளத்தை பயன்படுத்திகொள்ளலாம். ஐடியாக்கள், கிரியேட்டிவிட்டியால் தான் உலகம் மாறுகிறது” என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் இந்த தளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச டிஜிட்டல் தளத்திற்கு 'கற்றார்' என ரஹ்மான் தமிழில் பெயரிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.