'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

தனுசுடன் அட்ஜெஸ்மெண்டுக்கு சரி என்றால் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அவரது மேனேஜர் போனில் பேசியதாக டி.வி.நடிகை மான்யா ஆனந்த் புகார் கூறினார். பின்னர் அவர் தனது வீடியோ பேட்டி தவறாக எடிட் செய்யப்பட்டு தவறான தகவலை வெளியிட்டிருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு ஜனவரி 31ம் தேதி மற்றும் இந்தாண்டு பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் எனது சோசியல் மீடியாவில் 'வுண்டர் பார் பிலிம்ஸ்' என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்திருந்தேன்.
75987 46841 மற்றும் 75987 56841 ஆகிய எண்களில் இருந்து வரும் கால், மெசேஜ் அனைத்தும் போலியானவை. இந்த எண்களில் இருந்து எனது புகைப்படத்தை பயன்படுத்தி யாரேனும் சினிமா வாய்ப்பு தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




