ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர் இணைந்த தமிழ்ப் படமான 'வாரிசு' படத்தின் தெலுங்கு வெளியீடு தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'துணிவு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'தெகிம்பு' படத்திற்குக் கூட ஜனவரி 11 வெளியீடு என விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், 'வாரிசு' தெலுங்கு டப்பிங்கான 'வாரிசுடு' படத்திற்கு இன்னமும் 'சங்கராந்தி' வெளியீடு என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்களாம்.
தமிழில் படம் வெளியாகும் ஜனவரி 11ம் தேதியன்றே தெலுங்கு 'வாரிசுடு' வெளியாகாது என்று தெரிகிறது. தெலுங்கு டப்பிங் வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அதனால்தான் பட வெளியீட்டை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். அப்படி வெளியிட்டால் அது மீண்டும் ஒரு சிக்கலில்தான் போய் முடியும். தமிழில் ஒரு வேளை படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், அது தெலுங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், தயாரிப்பாளர் மீது விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'வாரிசு' படத்தின் தெலுங்கு டிரைலரான 'வாரிசுடு' டிரைலர் யு டியுபில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எனவே, தமிழில் படம் வெளியாகும் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் போதே தெலுங்கிலும் வெளியானால்தான் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. படக்குழுவினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.