அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

'எல்லா பணிகளையும் போன்று சினிமாவில் நடிப்பதும் ஒரு பணிதான். அதனால் 8 மணி வேலைநேர திட்டத்தை சினிமாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை முதலில் சொன்னவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவரை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவும் இதனை வழிமொழிந்தார்.
இப்போது கீர்த்தி சுரேசும் இதையே பேசி உள்ளார். அவர் நடித்துள் ரிவால்வார் ரீட்டா படம் வருகிற 28ம் தேதி வெளிவர இருக்கிறது. இதற்கான புரமோசன் பணிகளில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷிடம் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 8 மணி நேர வேலை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:
தற்போது 8 மணி நேர வேலை தொடர்பான ஆதரவு பெருகி வருகிறது. நடிகைகள் மட்டுமின்றி, லைட்மேன் வரை அனைவருக்குமே இது பொருந்தும். 8 மணி நேரம் நாங்கள் வேலை செய்த பிறகு இரவு 7 மணிக்குதான் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்புகிறோம். வீட்டுக்கோ ஓட்டல் அறைக்கோ செல்ல 8 மணி அல்லது 9 மணி ஆகிவிடும். பிறகு ஜிம் ஒர்க் அவுட், உணவு சாப்பிடுவது என முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் தூங்கவே முடியும்.
மீண்டும் அதிகாலையில் படப்பிடிப்புக்காக எழுந்து கொள்ள வேண்டும். மலையாள சினிமாவில் 12 மணி நேர வேலை என்பது கட்டாயம். காரணம், அங்கு படத்தின் பட்ஜெட், குறுகிய கால படப்பிடிப்பு போன்ற விஷயங்கள் உள்ளது. அதுபோல் 12 மணி நேரம் வேலை செய்யவும் நான் தயார்தான். ஆனால் உடல் நலனுக்காக 8 மணி நேர வேலைதான் நல்லது. என்றார்.




