ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் டியூட். கீர்த்தீஸ்வரன் இயக்கினார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இளவட்ட ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு பெற்ற இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் இந்த படத்தின் பாடல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஊரும் பிளட் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய் அபயங்கர். மேலும் ‛லவ் யூ மக்களே' என்றும் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.




