தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

2025 தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று 'பைசன், டியூட், டீசல், கம்பி கட்ன கதை' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'பைசன், டியூட்' ஆகிய படங்களுக்குத்தான் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
'டியூட்' படத்தின் வெற்றியை சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து விழா கொண்டாடிவிட்டனர். அன்றுதான் படமும் 100 கோடி வசூலைக் கடந்தது. தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியான இப்படத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கும் சக்சஸ் மீட் வைத்தார்கள்.
'டியூட்' படத்தின் வெற்றிவிழாவை அடுத்து இன்று மதியம் 'பைசன்' படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற உள்ளது. தெலுங்கில் இப்படம் நேற்றுதான் வெளியாகி உள்ளது. 'பைசன்' வெற்றி மூலம் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். படத்தின் நாயகன் துருவ் விக்ரமிற்கு தனி நாயகனாக தமிழில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் இரண்டு வசூல் வெற்றி என்பது தமிழ் சினிமாவுக்குப் பெரும் ஆறுதல்.