எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தனது குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர். மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் அவர் நேரம் செலவிடும் புகைப்படங்கள் ஏற்கெனவே வந்து பரபரப்பை ஏற்படுத்தியவை. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கும் அவருடைய ஈடுபாடு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்று கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சட்டையில்லாமல் மேல் துண்டுடன் அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகின. அஜித்தின் மார்பில் ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் 'டாட்டூ' வடிவில் குத்தப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடம் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அஜித்தின் குல தெய்வ கோவிலாம்.




